Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலை எதிர்த்த தாய், தந்தை, தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்

கர்நாடகா மாநிலம் கிழக்கு பெங்களூருவின் கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் நேற்று இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இத்தம்பதியரின் மூத்த மகளான ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பெற்றோர்களும் தங்கையும் ஸ்வேதாவைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது காதலை முன்னிட்டு இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் சேர்ந்து சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் சுப்ரியாவைத் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கே.ஆர்.புரம் போலீசார், தலைமறைவாக உள்ள காதல் ஜோடியை வலைவீசித் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!