Skip to content

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா…..பாடல் வெளியீடு

தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,  திமுக இளைஞரணி செயலாளரு உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி  மொரைஸ் கிளாரியான் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளிகல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பாடல்  தட்டினை வெளியிட்டார். பாடலை தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான
எஸ் பூச்சி முருகன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகர அவைத் தலைவர் நூர்ஜகான் வரவேற்றார்.
மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர பொருளாளர் தமிழ்ச்செல்வம்  நன்றி கூறினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன் ,சபியுல்லா,
கவிஞர்சல்மா , மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள்,
மாவட்ட மாநகர அணிஅமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!