Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று காலை தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அப்போது மானைபார்த்த நாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது.
இதனைகண்ட அப்பகுதிமக்கள் நாய்களை விரட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த மானை மீட்டனர்.

தொடர்ந்து, மீட்கப்பட்ட மானை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் உத்தரவின் பேரில் மானை அருகே உள்ள பருவமலை காப்பு காட்டில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

error: Content is protected !!