Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்ஸ்டா கணக்குகள் நீக்கம்: ஒன்றிய அரசுக்கு அபிஜீத் திப்கே கண்டனம்!

இன்ஸ்டாகிராமில் ஒன்றிய அரசுக்கு எதிரான பதிவுகள் மற்றும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காக்ரோச் ஜனதா பார்ட்டி நிறுவனர் அபிஜீத் திப்கே விமர்சித்து உள்ளார். சோஷியல் மீடியா உள்ளடக்கங்களை நீக்கி குடிமக்களின் குரலை ஒடுக்குவது, பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வாகாது என்று அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் கூறி உளளதாவது;

“இன்ஸ்டாகிராம் மீதான ஒடுக்குமுறை பலனளிக்கப் போவதில்லை. ஒன்றிய அரசு தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகளையும், கணக்குகளையும் நீக்கி வருகிறது; ஆனால், ஒரு அடிப்படையான விஷயத்தை அரசு சிந்திக்க தவறுகிறதாக தோன்றுகிறது.

அது என்னவென்றால் இன்ஸ்டாகிராம் என்பது மக்கள் தங்கள் கேள்விகளை எழுப்பும் ஒரு தளம் மட்டுமே. அந்தக் கேள்விகளுக்கான காரணங்கள் சமூக ஊடகங்களுக்கு அப்பால் எங்கோ இருக்கின்றன; எனவே, கணக்குகளை நீக்குவதால் மட்டும் அந்தப் பிரச்சினைகள் மறைந்துவிடப் போவதில்லை. சொல்லப்போனால், இத்தகைய தணிக்கை, அரசாங்கம் யாருக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளதோ, அந்த மக்களிடமே இன்னும் கூடுதலான அவநம்பிக்கையை உருவாக்கவே வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!