Skip to content

டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.  டில்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒருவர் தமது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.   போலீசார், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

அங்கு இரு கோஷ்டிகள் இடையே மோதல் மூண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதும் சிலர் காயம் அடைந்திருப்பதையும்  அறிந்த  போலீசார்   தடயவியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 துப்பாக்கிச்சூடு நடத்திய கோஷ்டிகள் யார் என்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.இது குறித்து  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜோதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சில துப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது  என்றார்.

சம்பவ பகுதியில் விசாரணையில் இறங்கி உள்ள போலீசார் அங்கு இருக்கும் சி.சி.டி.வி., கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதல் போலீசார் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

error: Content is protected !!