தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப் பதிவில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி (SIET) கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தனது குடும்பத்தினருடன் வந்து துணை முதலமைச்சர் வாக்களித்தார்.”வாக்களிப்பது நமது உரிமை மற்றும் கடமை” எனத் தெரிவித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
