Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார். இந்த நிலையில் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று நண்பகல்  2 மணிக்கு பிறகு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!