Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே திரௌபதி அம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரசித்தி பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் 61 அடி நீளமுள்ள கு

ண்டத்தில் விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி

வருகின்றனர். மேலும் விரதம் இருந்த பக்தர்கள் 5 அடி முதல் 10 அடி வரை நீளமுள்ள வேல் அழகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!