Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கடந்த 11 ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்த அம்மன் எதிரே நடப்பட்ட புனித கம்பத்திற்க்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிப்பட்டுவருகின்றனர். அதோ போல் இரவு நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், மா விளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். அதே போல் அக்னிசட்டி, அலகு குத்தியும், அமராவதி ஆற்றில் குழந்தைகளுக்கு முடி காணிக்கை கொடுத்து தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். குறிப்பாக அழகு குத்தியும் அமராவதி ஆற்றில் இருந்து ஆலயம் வரை வந்தனர். விழாவில் முக்கிய நிகழ்வுகளான அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திங்கள், செவ்வாய், உள்ளிட்ட இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். வருகின்ற புதன்கிழமை அன்று முக்கிய திருவிழாவான அம்மன் ஆலயத்திலிருந்து கம்பம் புறப்பபட்டு அமராவதி ஆற்றில் விடப்படும் வைபோகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடு வாழ் கரூர் மக்கள் தவறாமல் கலந்து கொள்வார்கள். கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியன்று வான வேடிக்கை வெகு விமர்சையாக நடைபெறும் இதை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
error: Content is protected !!