கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.
கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்த அம்மன் எதிரே நடப்பட்ட புனித கம்பத்திற்க்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி

அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.
அதோ போல் இரவு நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், மா விளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி முக்கிய விதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதே போல் அக்னிசட்டி, அலகு குத்தியும், அமராவதி ஆற்றில் குழந்தைகளுக்கு முடி காணிக்கை கொடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவில் வரை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவில் முக்கிய நிகழ்வுகளான அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திங்கள், செவ்வாய், உள்ளிட்ட இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
வருகின்ற புதன்கிழமை அன்று முக்கிய திருவிழாவான அம்மன் ஆலயத்திலிருந்து கம்பம் புறப்பபட்டு அமராவதி ஆற்றில் விடப்படும் வைபோகம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடு வாழ் கரூர் மக்கள் தவறாமல் கலந்து கொள்வார்கள்.
கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியன்று வான வேடிக்கை வெகு விமர்சையாக நடைபெறும் இதை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வரும் புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
