சதுரகிரியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தன் அடிப்படையில் பக்தர்கள் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு இன்று மற்றும் நாளை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாலை முதல் கோயில் அடிவாரப் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் சதுரகிரி கோயில் மலையேறி வருகின்றனர்.
