Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பக்தர்கள் அதிர்ச்சி.! இன்று சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.

காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!