கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பரப்புரையாளராக பணிபுரிந்த 26 பெண்கள் கடந்த அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்து பத்தாண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆன நிலையில் திடீரென்று கடலூர் மாநகராட்சியில் 26 பெண்களை பணி வீக்கம் செய்துள்ளனர்.
இவர்கள் ரூ.4000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர். தற்பொழுது 12000 ரூபாய் ஊதியம் வாங்கி வந்த நிலையில், இவர்கள் வேலை செய்த ஒப்பந்ததாரர்கள் காண்ட்ராக்ட் முடிந்தவுடன் இவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதியதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் தூய்மை பரப்புரையாளர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டது. ஊதிய உயர்வு ஏற்படுத்தியதால் எங்களை பணி நீக்கம் செய்து புதியவர்களை பணியில் அமர்த்துகிறார்கள், இது நியாயமற்ற செயல் என்று 26 பெண்கள் கடலூர் மாநகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பெண் பணியாளர்கள் பெட்ரோல் ஊற்றி தீ*குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
