Skip to content

திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைத்து பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்பட்ட போதிலும், இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் புகையிலைப்பட்டிக்கு வந்திருந்தனர். பாலகுரு அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் என்பதால், அவரது மறைவு அந்தப் பகுதி இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!