திண்டுக்கல் சீனிவாசன் EVM-ல் வாக்களிக்கும் பட்டனை அழுத்துவதற்கு பதிலாக லைட்டை அழுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது. முதலில் ஓட்டு விழவில்லை என அவர் கூறியதால், பூத் அதிகாரி EVM-ஐ பரிசோதித்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் வாக்களித்த அவர் ரெட் லைட்டை அழுத்தியிருக்கிறார். அப்போது அருகில் இருந்த அதிகாரி, சார் பட்டனை அழுத்துங்கள் என சொன்னதும், தனது ஓட்டை பதிவுசெய்து விட்டு சீனிவாசன் புறப்பட்டார்.
