Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

இயக்குநர் நாகேந்திரன் நடிகர் விமலை வைத்து காவல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இருந்தாலும் பல்வேறு திரைப்படங்களில் மற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இயக்குநர் மகேந்திரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நாகேந்திரன் மறைவையொட்டி இயக்குநர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்பக் காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. சகோதரனாய்.. நெருங்கிய நண்பனாய் பபணித்தவரை சட்டென்று இழந்துபோனதில் நெஞ்சம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்… இவ்வதிர்ச்சியைத் தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
error: Content is protected !!