திருச்சி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் பலர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கூறுகையில் எங்கள் காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் தறனாளிகள் வசிக்கின்றனர் அவர்களுக்கு உணவு சமைக்க மண்ணெண்ணெய் மற்றும் சிலிண்டர் பற்றாக்குறைவாக உள்ளது இதனால் காப்பகத்தில் உணவு சமைக்க முடியவில்லை எனவே உடனடியாக பத்து சிலிண்டர்கள் மற்றும் 200 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் இவர்கள் கடந்த மார்ச் மாதம் இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அங்கு வந்த அலுவலர்கள் அவர்களிடம் பேச்சு வர்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு மாவட்ட வளங்கள் அலுவலருடன் பேசி உடனடியாக தீர்வு காண உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது
