2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 28, 2026) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் முதற்கட்டமாக 10 முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
- விருத்தாசலம்: திருமதி.பிரேமலதா விஜயகாந்த் (கழகப் பொதுச்செயலாளர்)
- விருதுநகர்: திரு. வி. விஜய பிரபாகர் (கழக இளைஞர் அணிச் செயலாளர்)
- தருமபுரி: டாக்டர் திரு. V. இளங்கோவன்
- சேலம் மேற்கு: திரு. அழகபுரம் R. மோகன்ராஜ் (முன்னாள் MLA)
- மைலம்: திரு. எல். வெங்கடேசன் (முன்னாள் MLA)
- பல்லாவரம்: திரு. அனகை D. முருகேசன் (முன்னாள் MLA)
- ஓமலூர்: திரு. ஏ.ஆர். இளங்கோவன்
- திருத்தணி: திரு. D. கிருஷ்ணமூர்த்தி
- குடியாத்தம் (தனி): திரு. K.B. பிரதாப்
- போளூர்: திரு. T.P. சரவணன்

