தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் சையது பாரூக் அவர்களும் போட்டியிடுகின்றனர். திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடாமல், ஐயூஎம்எல் கட்சி தனது சொந்தச் சின்னமான ‘ஏணி’ சின்னத்திலேயே இந்தத் தேர்தலில் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

