தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக – கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 29) உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து நடத்தும் நிகழ்வில் சிபிஐ மூத்த நல்லகண்ணுவின் திருவுருவச் சிலையை உதயநிதி திறந்து வைத்தார். திமுகக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் விலகியுள்ள நிலையில், இன்றைய நிகழ்வில் திமுக, சிபிஐ ஒரே மேடையில் பங்கேற்றது.
