Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தேவர் சிலை முன்பு ஒரே நேரத்தில் திரண்ட திமுக, தவெகவினர்!

திருச்சி தேவர் சிலை முன்பு ஒரே நேரத்தில் திரண்ட திமுக, தவெகவினர்!

திருச்சி தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில்
ஒரே நேரத்தில் தவெக – திமுகவினர் மாலை அணிவிக்க திரண்டனர்.அப்பொழுது இரு கட்சியினரும் அமைச்சர் ரமேஷ் முன்னிலையில்
கோஷம் எழுப்பியதால்
பரபரப்பு ஏற்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119 ஆவது பிறந்தநாள் மற்றும் 64வது குருபூஜை விழா நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் அமைப்பினர்
தேவர் சிலைக்கு திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் காலை 10 மணிக்கு த.வெ.க வினர் மாலை அணிவிக்க
திருச்சி மாநகர போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் தவெக நிர்வாகிகள் அமைச்சர் ரமேஷ் தலைமையில் அங்கு திரண்டு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பொழுது
தவெக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
அப்பொழுது அங்கு திடீரென்று திமுக நிர்வாகிகளும் திரண்டு வந்து நின்றனர்.
இதனால் ஒரே நேரத்தில்
தேவர் சிலை அருகில் தவெக ,திமுக நிர்வாகிகள் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்த பிறகு தேவர்சிலை அருகில் அவர் நின்று கொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க அழைப்பு விடுத்தார் இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேவர் சிலை படிக்கட்டில் ஏறி சிலைக்கு மாலை அணிவித்து கொண்டு இருந்தனர். அப்பொழுது இதனை கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு தலைமையில்
நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் கீழே இறங்குங்கள் என்றுகோஷம் போட்டனர்.
அதற்கு தேவர் சிலை அருகில் நின்ற
அமைச்சர் ரமேஷ், கே.என். நேருவிடம் இரண்டு நிமிடம் நேரம் கொடுக்குமாறு சைகை காட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்காமல், தனது தொண்டர்களை மேலே ஏறிச் செல்லுமாறு சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மடமடவென்று திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தேவர் சிலை உள்ள படிக்கட்டில் ஏற தொடங்கினர் ஏற்கனவே அங்கு தாவேக தொண்டர்கள் நின்று கொண்டு இருந்ததால் இருவரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. திமுக வினர் படிக்கட்டில் ஏறும் பொழுது தவெக குறித்து கோஷம் எழுப்பிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதது.மேலும் அந்த இடத்தில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து விட கூடாது என்பதற்காக போலீசார் நிலைமையை புரிந்து கொண்டு த.வெ.க,திமுக நிர்வாகிகள் அருகில் போலீசார் பாதுகாப்புக்கு நின்று கொண்டனர்.இந்த சம்பவம் தேவர் சிலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!