பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த கவிஞர் வைரமுத்து, ரேகைச் சட்டக் கொடுமையிலிருந்து ஓர் இனக்குழுவையே மீட்டெடுத்தவர் தேவர் பெருமான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டியலின மக்களை உடன்பிறப்பாய் நேசித்து அனைவருக்கும் நிழல் தந்த ஆலமரமாகத் திகழ்ந்தவர் அவர் என்றும், ‘வரலாறு பொய்யா? வணங்குகிறோம் அய்யா!’ என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் அவர் உருக்கமாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருக்குக் கவிஞர் வைரமுத்து மரியாதை
