Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.8…கர்நாடகாவில் பால் விலை அதிரடி உயர்வு!

நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.8...கர்நாடகாவில் பால் விலை அதிரடி உயர்வு!

கர்நாடகா : பால் கூட்டமைப்பின் (KMF) சார்பில் விற்பனை செய்யப்படும் ‘நந்தினி’ பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்தி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வானது வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, இதுவரை நீல நிற பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வந்த அடிப்படை டோன்ட் பால் (Toned Milk) விலை லிட்டருக்கு ரூ.46-லிருந்து ரூ.54 ஆக உயரவுள்ளது.

இந்த விலை உயர்வில் இருந்து பெறப்படும் தொகையில் ரூ.7 நேரடியாகப் பால் உற்பத்தியாளர் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்பதால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு மொத்தம் ரூ.47 வரை கிடைக்கும். மீதமுள்ள ரூ.1 கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பால் சங்கங்கள் தரப்பிலிருந்து லிட்டருக்கு ரூ.10 வரை விலை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர்களின் சுமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இதனை ரூ.8 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

இதுகுறித்துத் கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, டீசல், பெட்ரோல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள், பிளாஸ்டிக் கவர்கள் விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது அவசியமாகியுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.

மேலும், கர்நாடகாவில் விலைக் குறைவாக இருந்ததால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பால் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.

error: Content is protected !!