பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நித்தியானந்தன் பொள்ளாச்சி பொட்டுமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ரூபாய் 8000 அச்சிடப்பட்ட டோக்கன் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய காலண்டர் ஆகியற்றை வழங்கி அவர், அங்கிருந்த பெண்களிடம் இது மாதிரி டோக்கன் இந்த டோக்கனில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து வைத்து கொள்ளுங்கள் தேர்தல் முடிந்து திமுக வெற்றிபெற்ற பின்பு அசல் டோக்கன் உங்களுக்கு வழங்கப்படும் அதை நீங்கள் கடைகளில் கொடுத்து உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் திமுக உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இந்த காலண்டரில் அச்சிடுள்ளோம் உங்கள் ஓட்டை உதயசூரியனுக்கு அளித்து திமுக ஆட்சி அமைக்குமானல் இந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார் வேட்பாளர் நித்தியானந்தன்.
பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
