கரூர் தேர்தல் திருவிழா – கோட்டை கருப்பண சுவாமி ஆலய மணியை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் தியாகராஜன்.
தமிழகத்தில் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் சட்டப்பேரவை திமுக வேட்பாளராக ஆசி தியாகராஜன் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக நாள்தோறும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக் பல்வேறு இடங்களில் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து காலை முதல் இரவு வரை உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் சாலை பகுதியில் உள்ள கோட்டை கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர்.
கோட்டை கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு வேட்பாளர் ஆசி தியாகராஜன் ஆலயத்தில் இருந்த பெரிய மணியை அடித்து தனது பிரார்த்தனை நிறைவேற்றிய பிறகு நீண்ட வரிசையில் நின்ற பெண் வாக்காளிடம் ஆசி பெற்று தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது திமுக அரசின் தற்போதைய தேர்தல் வாக்குறுதியான ரூபாய் 8000 பெண்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டத்தில் ஒன்றாக அமையும் எ

ன வேட்பாளர் ஆசி தியாகராஜன் பொதுமக்களிடம் உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதை தொடர்ந்து பேசிய கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் அசோக் இந்த தேர்தலில் கரூர் சட்டமன்ற உட்பட நான்கு தொகுதிகளும் திமுக அமோக வெற்றி பெறும் என கூறியதோடு நம்ப தான்

ஜெயிக்கிறோம் நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம் என்ற செந்தில் பாலாஜியின் தாரக மந்திரத்தை உச்சரித்தார்.
தொடர்ந்து வாக்காளர்களை திறந்த வேனில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த படி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
