அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக

போட்டியிடும் திமுக வேட்பாளர் இளங்கோ, திமுக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு வேட்டமங்கலம் ஊராட்சி, மதுரை வீரன் நகர்,வடுப்பட்டி, காந்திநகர், வேட்டமங்கலம் குடியிருப்பு, குந்தாணி பாளையம்

பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று இன்று காலை முதல் வீடு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வேட்பாளர் இளங்கோ பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து மீண்டும் திமுக அரசை அமைக்க ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி, வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் வேட்பாளர் உறுதியளித்தார்.

