தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று வடக்கு பகுதிக்குட்பட்ட தீரன் நகர், ஜீவா நகர் நான்காவது கிராஸ் , பாலகிருஷ்ணா நகர், வாங்கபாளையம் பஸ் ஸ்டாப், ஜெ.ஜெ சாலை, கொங்கு நகர் மெயின் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து செந்தில் பாலாஜியின் சகோதரரும் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான அசோக் குமாரும் இருசக்கர வாகனத்தில் சென்று பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் மற்றும் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் ரோஜாப்பூ வழங்கி வரவேற்றனர் தொடர்ந்து பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
