Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக வேட்பாளர் பட்டியல் தயார்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக மிதமுள்ள 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனிடையே திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரசுடனான தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இன்று இரவு 10 மணிக்குள் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி ஒதுக்கீட்டில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்ததையடுத்து 164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பட்டியலுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அவரது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!