Skip to content

திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி

சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர்.எழிலன் எம்எல்ஏ மற்றும் தேர்தல் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை, ஆதிதிராவிடர் மகாஜனசபை, அனைத்து முதலியார் வேளார் சங்கங்களின் பேரவை, இளைஞர் படுகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர். கூட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து, கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறோம்.

error: Content is protected !!