Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம் 2023” என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய  மேற்கண்ட 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், “நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதால்,  இவை சட்டவிரோதமானது , தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சூழலில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!