Skip to content
Home » திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற தமிழக அரசின் சாதனை மலர்,செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர்அறிவித்த அறிவிப்புகள், உரைகள் இந்த சாதனை மலரில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாளை முதல் 3 நாட்கள் திமுக சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!