பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக 78-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக, அதன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகநீதி, மாநில உரிமை, பெண் விடுதலை போன்ற கொள்கைகளோடு திமுக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது கூறியுள்ளார். மேலும், எதிர்ப்புகளை கடந்து இயக்கம் துடிப்போடு நடைபோடுவதாக சுட்டிக்காட்டிய அவர், கழகத்தின் மேன்மைக்காகத் தொடர்ந்து உழைக்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
