Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் விபத்தில் சிக்கியது- பயணிகள் காயம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பேருந்து விபத்தில் சிக்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று காலை விக்கிரவாண்டி அருகே பாப்பனபட்டு என்ற இடத்தில் சென்று கொன்டிருந்தது இவ்விடத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மணல்களை மேடுகளாக கொட்டி வைத்துள்ளனர்.

இதனால் வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இணைப்பு சாலைகள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவ்வழியாக வந்த இந்த பேருந்தது, அந்த இணைப்பு சாலை வழியாக செல்லாமல் நேராக சென்று அந்த அறிவிப்பு பலகை மீது மோதி மேம்பாலம் கட்டுவதற்க்காக இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல் மேட்டின் மீது ஏறி விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணம் செய்தனர். இதில் 11 பயணிகள் காயமடைந்தனர், அவர்களை பத்திரமாக மீட்டு உடனடியாக நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீசார் சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், விபத்துக்குள்ளான பயணிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது.

error: Content is protected !!