கரூர் தேர்தல் திருவிழா – தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைய கரூர் சட்டமன்ற தேர்தல் திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் மான அசோக் வெங்கமேடு அண்ணா சாலை அருகே உள்ள விநாயகர் ஆலயத்தில் கழக நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறுவதை ஒட்டி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி திமுக கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் நிலையில் தற்போது அவர் இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு போட்டி இருக்கிறார்.
இதனால் கரூர் சட்டமன்ற தேர்தலில் அவரது ஆசி பெற்ற வேட்பாளராக ஆசி தியாகராஜன் களம் காண்கிறார்.மேலும் அரவக்குறிச்சி, கிருஷ்ணாயபுரம், குளித்தலை உள்ளிட்ட திமுக சார்பில்

போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தற்போது கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக தீவிர பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கரூர் சட்டமன்ற வேட்பாளர் ஆதரித்து நாள்தோறும் இரவு, பகல் பாராமல் தேர்தல்

பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
இந்நிலையில் கரூர் வெங்கமேடு அண்ணா சாலை அருகே உள்ள விநாயகர் ஆலயத்தில் மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைய தனது கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்த பிறகு திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை ஆதரித்து திறந்த வேனில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி வெற்றி இடத்தை நிரப்பும் விதமாக அவரது சகோதரர் தற்போது தீவிர தேர்தல் களப்பணி ஆற்றி வருவது கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
