Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ந் தேதி நடைபெறவுள்ள தி.மு.க-வின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாநாட்டுத் திடல் மற்றும் பிரம்மாண்ட மேடை அமைக்கப்ப

ட்டு வரும் பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கேட்டறிந்தார். மேலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களுக்கான உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் இந்த மாநாடு, தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து

கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,
ஸ்டாலின் குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!