Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்- பெ.சண்முகம் பேட்டி

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்; திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி; திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணி மிகவும் வலுவான அணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது.

அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பல்வேறு கட்சிகள் அளித்துள்ளன. 100% நிறைவேற்றக்கூடிய வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னரை விட மிகச்சிறப்பான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் யாரும் சொல்லாத வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர்ஸ்டார் என்று கூறினார்.

error: Content is protected !!