• காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
• இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
• திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
- மாநாட்டு ஏற்பாடு மாநாட்டிற்காக 10,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாகத் தனித்தனி அமர்வு பகுதிகள், முகவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
•முதலமைச்சர் உரை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற இயக்கத்தின் கீழ் முகவர்களுக்குத் தேர்தல்

வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.
•பாதுகாப்பு மற்றும் வசதிகள்: முகவர்களின் நலன் கருதி திடலில் மினி கிளினிக், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புத் துறை பாதுகாப்பு மற்றும் நகரும் கழிவறை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தொண்டர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
•மண்டலப் பொறுப்பாளர்கள்: இந்த மாநாட்டிற்கான பணிகளை ஆ. ராசா எம்.பி. மற்றும் அமைச்சர் M. R. K. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
•200+ தொகுதிகள் இலக்கு: 2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
•அடுத்தடுத்த மாநாடுகள்: திருவிடந்தையைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் திருப்பத்தூர் (பிப். 14), மதுரை (பிப். 21) மற்றும் கோவை (பிப். 27) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த மண்டல மாநாடுகள் நடைபெறவுள்ளன.

