Skip to content

திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.

• திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் நடைபெறுகிறது.

  • ⁠தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குசாவடிகளில் குழு அமைத்து ‘என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி’பரப்புரை நடைபெற்று வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உற்சாகப்படுத்தவும் முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்

• வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது

• 47 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.

• திமுகவின் BLA2, BLC, BDA, BYA ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

• மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் திமுகவின் சாதனை பட்டியலை விளக்கும் முதலமைச்சரின் சட்டமன்ற உரைத் தொகுப்பு நூல் வழங்கப்பட உள்ளது.

• மாநாட்டை மண்டலப் பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு ஒருங்கிணைக்கிறார்.

• மாநாட்டிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது.

• மாநாட்டு திடல் முழுவதும் திமுகவின் சாதனை அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

• மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரவுள்ள சுமார் 2500க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் மற்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 80 ஏக்கர் பரப்பளவிலான பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

• மாநாட்டு திடலில் நிர்வாகிகளுக்கு தேவையான மருத்துவ வசதிக்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

• தீயணைப்பு மற்றும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!