Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தேவேந்திர சிங்,மாநில பொருளாளர் மணிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பசுபதி ராஜலிங்கம் கலந்து கொண்டார்.
இதில் திருச்சி மாவட்டத் தலைவர் சேந்தமாங்குடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட அமைப்பாளர்
மனோ சுதாகரன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன்,மேற்கு மாவட்ட செயலாளர்

வீரமணி.விருதுநகர் மாவட்ட தலைவர் கோபால்பாண்டியன். கரூர் மாவட்ட செயலாளர் திலீபன்,அரியலூர் மாவட்ட செயலாளர் எம் கே பிரபாகரன். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிமுத்து. தஞ்சை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி.
மணிகண்ட ஒன்றியம் செயலாளர் சரவணன். லால்குடி ஒன்றிய செயலாளர் ராஜு, மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன். அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உட்பட தொண்டர்கள் ஆண்கள் பெண்கள் என குடும்பத்துடன் பங்கேற்றனர். பொதுக்குழுவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பது,கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!