Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நம்ம பக்கத்து நாட்டுல ..ஒரு டாலர் ரூ 262.60 பைசா தெரியுமா? ..

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி இழுத்து சென்றுள்ளது. இதன் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!