பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே பேசிய தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, 2 சொட்டு கண்ணீருக்கு மயங்கி விடுபவர்கள் எதற்கும் கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். பொறுப்பில் இருப்பவர்கள் பதில் சொல்லாமல் அழுது சமாளிக்க கூடாது என்றும், நல்லவன் வேடம் போடுபவர்களின் போலியான அழுகைக்கு ஆதரவாக சென்றால் சமூகத்தில் டம்மியாகவும் ஜோக்கராகவும் மட்டுமே தெரிவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைவரும் சுய சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
