Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்… ரஜினி பேட்டி..

நடிகர்களை வாகனங்களில் பின்தொடரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்பான கேள்விக்கு, ‘இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தான் காயம் ஆகும்’ என நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்டியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயப்பட்டால் அது உங்களுக்குதான் ஆபத்து, பின்னால் சென்று காயம்பட்டால் யாரும் உதவமாட்டார்கள். படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. படிக்கும் நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர். தயவுசெய்து குடிப்பழக்கம், கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக்கூடாது. உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நானும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கும்” என்றார்

error: Content is protected !!