Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்தற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.

இந்தநிலையில், விசிகவில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தநிலையில் போட்டியில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

திருமாவளவனுக்கு பதிலாக மாற்று வேட்பாளரை களம் இறக்க விசிக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவனுக்கு பதில் விசிக மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வேட்பாளராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. திருமாவளவன் ஏற்கனவே சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!