Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

கரூரில் சீட்டு நிறுவனக் கடன் அச்சுறுத்தலால் காரணமாக டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு – ஆட்சியரிடம் குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பரபரப்பு புகார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம், பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசி. இவரது கணவர் மகாமுணி ( 33), லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2024-ம் ஆண்டு சுபம் தனியார் சீட்டு நிறுவனம் ஒன்றில் ரூ. 2,00,000 சீட்டு சேர்ந்து மாதத் தவணை செலுத்தி வந்த நிலையில், மருத்துவச் செலவு மற்றும் வேலை இழப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாகத் தவணை தொகையைச் சரியாகச் செலுத்த முடியவில்லையெனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சீட்டு நிறுவனப் பங்குதாரர் லோகநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மகாமுனியின் வீட்டிற்குச் சென்று கடுமையான மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் மணியரசு என்பவர் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகப் பொன்னரசி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வீட்டிற்கு வந்து மிரட்டி உள்ளனர் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆனான மகாமுனி கடந்த ஜூலை 20-ஆம் தேதி இரவு வீட்டின் எதிரே இருந்த கொட்டகையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், மைலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 21-தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவரை இழந்து இரு குழந்தைகளுடன் தவிக்கும் பொன்னரசி, தனது கணவரின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு கந்துவட்டிக் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல் துறையின் மெத்தனப் போக்கு குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம்குடும்பத்துடன் சென்று காலில் விழுந்து நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!