Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்பனை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

ஸ்ரீரங்கம் மேல அடையாளஞ்சான் வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரகுராம் (வயது 23)என்ற வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். பிறகு அவரிடம் இருந்துபோதை மாத்திரைகள், ரூ19 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திருவரங்கம் வடக்கு வாசல் காளியம்மன் கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50) இவர் நேற்று தனது வீட்டு முன்பு உள்ள புங்க மரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்ஆர்எம் யூ ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை இயந்திரப் பராமரிப்பு பொறியாளரின் நடவடிக்கைகளை கண்டித்தும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உரிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம் யூ மாநில நிர்வாகி வீரசேகரன் சிறப்புரையாற்றினார்.ஒப்பந்த தொழிலாளர்களை அதிகளவு வேலைக்கு எடுத்துவிட்டு குறைந்த ஆட்களை வைத்து வேலை செய்வது,தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு காணாமல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுபல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான
எஸ் ஆர் எம் யூ ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முதியவரிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறிப்பு

திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி இங்கு உறவினர் புதுமனை புகு விழாவிற்கு வந்து உள்ளேன்.நீங்கள் பெரியவராக இருக்கிறீர்கள். நான் புதிதாக நகை வாங்கி உள்ளேன். அதனை ஆசீர்வதித்து கொடுங்கள் என்று கூறி தன் கையில் வைத்திருந்த ஒரு நகையை துரை மாணிக்கத்திடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி துரை மாணிக்கம் ஆசீர்வாதம் செய்து திருப்பி கொடுத்தார்.
இதையடுத்து அந்த மர்ம ஆசாமி துரை மாணிக்கம் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை பார்த்துவிட்டு இந்த நகை நன்றாக இருக்கிறது. இதுபோல் டிசைனில் நானும் நகை செய்யலாம் என்று இருக்கிறேன்.
கொஞ்சம் அதனை காட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து துரை மாணிக்கம் தனது கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை கழற்றி மர்ம ஆசாமியிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு மர்ம ஆசாமி துரை மாணிக்கத்திடம் எனது நகையை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நீங்கள் பூஜை செய்து எடுத்து வாருங்கள் எனக்கு சற்று களைப்பாக இருக்கிறது. இங்கேயே நிற்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மர்ம ஆசாமி கூறிய வார்த்தையை நம்பி துரை மாணிக்கம்
ஆசாமி கொடுத்த நகையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வெளியே வந்து பார்த்தார். அப்பொழுது அங்கு நின்றிருந்த மர்ம ஆசாமி காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துரை மாணிக்கம் அருகில் உள்ள நபர்களிடம் கேட்டபோது யாரும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
பிறகு தான் துரை மாணிக்கத்திற்கு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என தெரிய வந்தது.தன்னுடைய நகையை மர்மா சாமி திருடி சென்று உள்ளான் என தெரிய வந்தது.மேலும் தன்னிடம் இருந்த நகையை அங்கு இருந்தவர்களிடம் காட்டிய போது அந்த நகை கவரிங் நகை என தெரிய வந்தது.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரை மாணிக்கம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரிடம் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!