Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது

காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது

காஞ்சிபுரம் அருகே மதுபானத்தை சம பங்காக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஏரியின் சேற்றில் அமுக்கி வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி (29). கூத்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). நண்பர்களான இருவரும் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் மதுபான கடைகளுக்கு வருபவர்களிடம் 5, 10 ரூபாய் வாங்கி கொண்டு மதுபானம் வாங்கி அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவும் வழக்கம் போல கிடைத்த பணத்தில், மது வாங்கி கொண்டு காரை பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு இருவரும் அமர்ந்து கிளாசில் ஊற்றினர். அப்போது, மதுவை சமமாக பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அருள்மணி தாக்கியதில் மணிகண்டன் மயங்கி விழுந்தார். அவரை அதே பகுதியில் உள்ள சேறும் சகதியுமான குட்டைக்கு தரதரவென இழுத்து சென்றார். பின்னர் சேற்றில் தலையை அமுக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இதனிடையே, ஏரிக்கரை பகுதிக்கு சென்றவர்கள், ஒருவரின் தலை சேற்றில் அமுக்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். பின்னர், பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கியிருந்த அருள்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபானம் அருந்துவதில் ஏற்பட்ட தகராறி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!