Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பஸ் ஸாடாண்டு அருகே மது கடைகள் உள்ளது. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பஸ் ஸ்டாண்டில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஒரு மது பிரியர் மதுவை குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்தபோது பஸ்சின் கீழ் பகுதிக்கு சென்று படுத்து கொண்டார். இதனால் ஓட்டுனர்கள் அவரை அப்புறப்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர் பின்னர் தண்ணீர் ஊற்றி மது பிரியரை தூக்கி ஓரமான இடத்தில் வைத்தனர். இரவு நேரத்தில் மது பிரியர்களின் கூடாரமாகவே அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டு உள்ளது.

இதனால் அறந்தாங்கி போலீசார் அடிக்கடி அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்கு ரோந்து சுற்றிவரவேண்டும். மது பிரியர்களின் நடமாட்டத்தை பஸ் ஸ்டாண்டில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!