Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

துபாயில் நடந்துள்ள இந்தச் சாலை விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் இவ்விபத்தில் சிக்கியிருப்பது வேதனைக்குரியது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில், இந்தியத் தொழிலாளர்களை ஏற்றி வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

போலீஸ் அறிக்கை: மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை (Safe Distance) கடைப்பிடிக்காததே இந்த கோர விபத்துக்கு முக்கியக் காரணம் என்று துபாய் போக்குவரத்து காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.

விபத்தின் வீரியத்தால் 7 இந்திய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 இந்திய தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 4 பேருக்கு நடுத்தரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள துபாயில் உள்ள இந்தியத் தூதரகம், தங்களது அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் துபாய் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!