சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன.
அதே போல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி கூறியதாவது; அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு இதுவரை விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழ்நாடு அரசு நிராகரிக்கும் .
இவ்வாறு அவர் கூறினார்.
