Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலலோடு,

இன்று 30/12/2025 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, இணைப்பு சக்கர

ம் பொருத்தப்பட்ட 24 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 சர்க்கர நாற்காலிகளும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , *புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா,
மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்
ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வின்போது மாநகர துணை மேயர் எம். லியாக்கத்அலி, தெற்கு மாநகர செயலாளர் வே.ராஜேஷ்,மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம், மாநகராட்சி உறுப்பினர் செந்தாமரை பாலு , மற்றும்இதயம்அப்துல்லா உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!